கருப்பு வெள்ளை பட போட்டிக்கு

இந்த படம் UAE ஷர்ஜாலேர்ந்து கல்பா எனும் இடத்துக்கு போகும் வழியில் உள்ள குகைப்பாதையில் எடுத்தது இது இருவழி போக்குவரத்து இருப்பதால் வண்டிய விட்டு கிழே இறங்கி படம் பிடிக்க முடியவில்லை காரிலே போகும் போது எடுத்தது பல படங்கள் கிளிக்கியதில் இந்தப்படம் தான் நல்லா வந்துருக்கு.

நிழல் பட போட்டிக்கு

ஏதோ என்னாலான முயற்சி பார்த்துட்டு நாலு நல்ல வார்த்த சொன்னா தெரிஞ்சுக்குவேன்.

நன்றி.

இதுதான் ஒரிஜினல் அதை கொஞ்சம் கார்ப் செய்து கொஞ்சம் வெளிச்சம் கூட்டி குறைத்தது.
புறா பின்னாடி லோ லோனு அலைஞ்சது


ஆனாலும் நல்ல புறா பயப்படவே இல்லை.

விளம்பர போட்டிக்கு


போட்டிக்கான படம்



முதலில் Uniball பேனாவிற்கு படம் எடுக்க முயற்சி எடுத்தேன்.


முதல் முயற்சி.

இரண்டாம் முயற்சி.



கடைசியில் காமரா படமே முடிவானது.

முதல் Panoramic படம்


எனக்கும் எப்படி இவ்வளவு அழகாக அகண்ட படம் எடுக்குறாங்கன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருந்துச்சு அதை மார்ச் மாசம் பார்த்தாச்சு அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் .







UAE ல Hatta (ஹத்தா) ன்னு ஒரு இடத்தில தன் நான் அவனில்லை படத்தில் ஒரு பாடல் காட்சி எடுக்கபட்டதுனு யாரோ சொன்னாங்க அந்த பாட்ட பாத்ததுலேந்து ஹத்தா போய் அந்த இடத்த பாத்துட்டு வந்துடனும்னு ஆர்வமா கிளம்பியாச்சு .

இங்க தாங்க அந்த பாடல் காட்சி எடுககப்பட்டது






என் CANON IXUS860 ல் தான் இந்த படங்கள் எடுக்கப்பட்டது இந்த கருவில STICH அப்படினு ஒரு முறை இருக்கு அது மூலம் எடுத்து தான் இந்த Panoramic படம் எடுத்த நான்கு படங்களும் முக்காலி இல்லாமல் எடுக்கப்பட்டது இந்த படங்கள் எடுக்கும் போது கை நடுங்காமல் எடுக்கவேண்டும்.

உங்கள் காமரால Stich ங்குற முறையை தேர்வு செய்து படம் எடுக்கவேண்டியது தான் .

முதல்ல எந்த படம் எடுத்திக்களோ அந்த படத்தின் கடைசி பாகத்திற்கு முன் அடுத்த படம் எடுக்க வேண்டும் இது போல் எத்தனை படங்கள் நீங்க தைக்க நினைத்தாலும் இதே முறைகள் செய்யலாம்.

முதல் படம்


இரண்டாம் படம்
மூன்றாம் படம்

நன்காம் படம்
எல்ல படத்தையும் உங்கள் கணினிக்கு ஏற்றுமதி செய்துவிட்டு உங்கள் Programs Canon Photo Stich அப்படின்னு ஒரு Applicaion இருக்கும் அதை திறந்துகொண்டு எந்த படங்களை நீங்கள் தைக்க படம் பிடித்திர்களோ அந்த படங்கள் எடுத்து வரிசை முறையாக வைத்து Stich Now என்கின்ற பட்டனை அமர்த்தினால் தானாக படம் தைக்கப்பட்டு இப்படி தெரியும் அனேகமாக இப்பொழுது வரும் எல்லா புதிய காமரளையும் இந்த வசதி உள்ளது .


எதாவது நல்ல வார்த்த நாலு சொன்னிங்கன்னா நானும் தெரிஞ்சுக்குவேன் நன்றி.





நான் எடுத்த முதல் Panning படம்



நம்ப PIT எப்படி Panning படம் எடுக்குறதுனு போடுருந்தங்க எனக்கும் இதுபோல RACING CAR படம் எடுக்கணும்னு ரொம்ப நாளா ஆசை எப்படி எடுக்குறதுனு PIT பல முறை படிச்சு பார்த்துட்டு முயற்சி செய்து பார்த்துடனும்னு கிளம்பிட்டேன் சரி படங்கள் எப்படி வந்துருக்குனு பார்போமா.

முதல்ல எடுத்தது பைக் சரியாக வரல ஓட்டுபவர் என்னையே பார்த்துகிட்டே போனார் எடுத்து பார்த்தா சாதரணமா எடுத்த மாதிரி இருந்தது.


திரும்பவும் பல படங்கள் எடுத்தேன் கொஞ்சம் கொஞ்சமாக சரியாக வந்தது இன்னும் shutter வேகத்தை குறைக்க ஆரம்பித்தேன் ஒவ்வொரு படமும் எடுக்க எடுக்க ஆர்வம் வர ஆரம்பித்தது.


கடைசில நான் எதிர் பார்த்தது கிடைத்தது ரொம்ப சந்தோசமாக இருந்தது என்ன மாதிரி கத்துகிரவங்களுக்கு PIT ஒரு வரபிரசாதம் தான் நன்றி CVR.

PIT மெகா போட்டி ஆகஸ்ட் முதல் 15

முதல் படம்

எனது விட்டருகே எடுக்கபட்டது PICASA உதவியால் வானத்தில் மட்டும் வர்ணம்சிறிது சேர்க்கப்பட்டுள்ளது நல்ல நேரம் காகம் அமைதியாக காத்திருந்தது நான் கிளிக்கும் வரை.




பார்வையாளர்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள் தயவுசெய்து விமர்சிக்கவும்.

பார் துபை பாரம்பரிய கிராமம்

பார் துபை (Harritage Village) எனும் இடத்தை அரசாங்கம் பாதுகாத்து பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றது ஒவ்வொரு வியாழக்கிழமை இரவும் நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றது.